Follow me on Twitter RSS FEED

எழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும்!


மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.


மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்!






அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிட முகவரி-

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

இசைப்பா! 3

இப்பாடத்தில் வேறொரு வகையான இசைப்பாவைப் பற்றி அறியவிருக்கிறோம்.

மறப்பேனா?

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

காசி. ஆனந்தன் -மட்டக்களப்பு.

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.