வெள்ளி, 27 ஜூன், 2008

பாடம்11 சிந்தியல் வெண்பா!

மூன்று அடிகளைக் கொண்டது சிந்தியல் வெண்பாவாகும். ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவை:- 1-நேரிசைச் சிந்தியல் வெண்பா 2-இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

1-நேரிசைச் சிந்தியல் வெண்பா:-

முதல் அடியின் முதற்சீரிலும் இரண்டாம் அடியின் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்லும் எதுகையமையப் பாடுவது.

காட்டு:-

நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

இச்சிந்தியலில் முதற்சீர் ஐந்தாம்சீர் மற்றும் எட்டாம் சீர் எதுகையெடுத்து வந்தமை காண்க. அதாவது இரண்டாமடியின் கடைசிச் சீரில் எதுகையெடுத்துவருவது. ஆகையால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா!

ஈரடியும் முக்காலும் ஏற்றுவரின் சிந்தியலாம்;
கூறடி மூன்று(ள்)தனிச் சீர்பெறலே -நேரிசையாம்;
ஊர்க்கிதை ஓதிடுவீர் ஓர்ந்து! -அகரம்.அமுதா

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:-

தனிச்சீர் பெறாமையும் அடியேதுகை பெறாமையும் இன்னிசை வெண்பாவாகும்.

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

இச்சிந்தியலைக்கவனிக்க:- மூன்றடிகளிலும் எதுகை எடுத்து வந்திருப்பினும் தனிச்சொல் பெறாமையால் இன்னிசையானது. (தனிச்சொல் -இரண்டாமடியின் நான்காம் சீரில் எதுகையெடுத்தல். இதை இப்படியும் சொல்லலாம் வெண்பாவின் எட்டாம்சீர் எதுகைபெறாமை)

முன்புவெண் பாவுரைப்பேன் முப்பாவும் -பின்புரைப்பேன்
பூவிற் சிறந்தது தாமரை பொன்மயிலே!
பாவிற் சிறந்ததுவெண் பா! –பாரதி தாசன்.

இச்சிந்தியலை நன்கு கவனிக்கவும். முதற்சீர் (முன்பு -ன்) -எதுகையெடுத்துவந்து இரண்டாமடியின் முதற்சீரில் (ன்) -எதுகையின்மையால் இன்னிசையானது. மேலும் முதலடியின் முதற்சீரும் நான்காம் சீரும் எதுகையெடுத்து வந்துள்ளது. அப்படிவரின் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.

மேலும் முதற்சீரிலும் எட்டாம் சீரிலும் எதுகைபெற்றிருந்தும் ஐந்தாம் சீரில் எதுகை பெறாமையால் இன்னிசையுள் அடங்கிவிடுகிறது. (அனைத்து அடிகளிலும் எதுகையெடுத்து வராதவையும் இன்னிசைச் சிந்தியலேயாகும்.)

மேலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணம் 1,5,8-ம் சீர் எதுகை யெடுத்துவருவது கட்டாய விதி. இவ்விதியை மீறின் அது இன்னிசைச் சிந்தியலில் வைக்கப்படும்.

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

  1. ஆக,
    முதலடி - 1 சீர், 4 சீர் - எதுகை

    2ஆம் அடி - 1 சீர், 4 சீர் - எதுகை

    (அடி எதுகை & சீர் எதுகை)
    - இது நேரிசை

    2ஆம் அடி 4 சீர் எதுகை இலாவிடின் இன்னிசை


    இவ்வளவுதானே!
    விதியில் மோனையைப் பற்றி ஏதுமிலை போலும்.

    இது 4அடி வெண்பாவிற்கும் பொருந்துமா?

    பதிலளிநீக்கு
  2. //நமக்கு 1,5,8ம் சீர்தான் கணக்கு.//
    ஓகே மேடம்.

    பதிலளிநீக்கு
  3. ஜீ!

    முதலடியின் முதல் சீரில் மட்டுமே எதுகை. முதலடியின் நான்காம் சீரில் எதுகை வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. முதலடியின் நான்காம் சீரில் எதுகை வந்தால்அது இன்னிசை வெண்பா.

    1இ2இ3இ4
    5இ6இ7இ-8
    9இ10இ11

    சிந்தியல் வெண்பாவில் அதாவது மூன்றடிகளைக் கொண்ட வெண்பாவில் மொத்தம் பதினோரு சீர்கள் இருக்கும் (இருத்தல் வேண்டும்). இந்த பதினோரு சீர்களுள் 1இ5இ8-ம் சீர்கள் ஓரெதுகை பெற்று வந்தாலே போதும் மீதமுள்ளது ஈற்றடியாகிய முன்றாமடியல்லவா? இது எதுகையெடும்துத்தான் வரவேண்டும் என்பதில்லை. நமக்கு 1இ5இ8ம் சீர்தான் கணக்கு.

    மோனை பொழிப்புமோனையோ ஒரூஉ மோனையோ அமைதல் வேண்டும். தொடையதிகாரத்தை நன்கு படித்தீர்களா? அதில் எங்கெங்கு மோனைவரவேண்டும் எனத் துல்லியமாக உள்ளதே!

    /////இது 4அடி வெண்பாவிற்கும் பொருந்துமா?/////

    அதைப்பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போமே!

    பதிலளிநீக்கு
  4. இச்சிந்தியலில் முதற்சீர் ஐந்தாம்சீர் மற்றும் /////ஏழாம் சீர்////// எதுகையெடுத்து வந்தமை காண்க. அதாவது இரண்டாமடியின் கடைசிச் சீரில் எதுகையெடுத்துவருவது. ஆகையால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா!


    அன்பின் அய்யாவுக்கு

    ”ஏழாம் சீர்” என்பது ‘எட்டாம் சீர்’
    என்றிருக்க வேண்டுமோ ?

    அய்யாவின் கவனத்திற்கு

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com