அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!
விளக்கம்:-
இப்பாட்டில் அன்பையும் அறனையும் ஒரு வரிசையிற்படுத்தி அதே வரிசைப்படி, பண்பையும் பயனையும் நிறுத்திப் பாடப்பட்டுள்ளமையான் இப்பா நிரல் நிறை அணியாகும்.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து!
விளக்கம்:-
நோய் மற்றும் பசலையைத் தந்து அதற்கு மாறாக தோற்றத்தையும் நாணத்தையும் பெற்றுக்கொண்டதாக வரிசைபடுத்தப் பட்டுள்ளமையான் நிரல்நிறை அணியாகும்.
ஒற்றுமிகு மிடங்கள்!
26.சில வினையெச்சங்களின் முன் வலிமிகும்.
காட்டு:-
கண்டென களித்தான் ---கண்டெனக் களித்தான்
காணா களித்தான் ---காணாக்களித்தான்
காண களிப்புறும் ---காணக்களிப்புறும்
தேடி கண்டேன் ---தேடிக்கண்டேன்.
ஒற்றுமிகுமிடங்கள் முற்றிற்று. அடுத்த பாடத்திலிருந்து ஒற்றுமிகா இடங்களைக் காண்போம்.
இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழா எழு!
அகரம்.அமுதா
இந்திய நாடேதான் ஈழத் தமிழர்களை
பதிலளிநீக்குமுந்திவந் தழிக்கிறது முக்காட்டில்! - இந்தநிலை
ஆழப் புரிந்தே அடுத்தவினை ஆற்றிடுக!
ஈழத் தமிழா எழு!
எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் அடிச்சேன்.... இணையத்தில் இப்படி ஒரு பாடம்....... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅணியிலக்கண பாடங்களும்... உங்களது குறும்பு வெண்பாக்களும் மிக அருமை...
வெண்பா எழுதுவது எளிது.. அது முயல்பவருக்கு மட்டுமே புரிகிறது..
வாழ்த்துக்கள்
எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் அடிச்சேன்.... இணையத்தில் இப்படி ஒரு பாடம்....... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅணியிலக்கண பாடங்களும்... உங்களது குறும்பு வெண்பாக்களும் மிக அருமை...
வெண்பா எழுதுவது எளிது.. அது முயல்பவருக்கு மட்டுமே புரிகிறது..
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஆதவா அவர்களே! தங்கள் வருகையும் கருத்துகளும் எனக்கு மென்மேலும் ஊக்கம் அளிக்கிறது.
பதிலளிநீக்குவருக உயர்திரு savuccuஅவர்களே! வெண்பா அருமை. இரண்டாம் அடியில் ஓரிடத்தில் தளை தட்டுகிறது. சற்றே மாற்றினால் நன்றாயிருக்கும். வெண்பா அருமை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்திய நாடேதான் ஈழத் தமிழர்களை
முந்தி அழிக்கிறது முக்காட்டில்! - இந்தநிலை
ஆழப் புரிந்தே அடுத்தவினை ஆற்றிடுக!
ஈழத் தமிழா எழு!