நாம் காணவிருப்பது வெண்பாவிற்கான இலக்கணம் என்பதால் நேரடியாக உறுப்பியலுக்குச் செல்வது நன்று. செய்யுள் உறுப்புக்கள் மொத்தம் ஆறுவகைப் படும்.
அவை:-
1-எழுத்து
2-அசை
3- சீர்
4-தளை
5-அடி
6-தொடை என்பவையே அவ்வாறும்.
எழுத்தசை சிர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உருப்பெனச் செப்புவர் புலவர்.
இச் சூத்திரத்தை நன்கு மனனம் செய்யவும்.
எழுத்து.
12 உயிரெழுத்துக்கள் (அ முதல் ஔ வரை)
18 மெய்யெழுத்துக்கள் (க் முதல் ன் வரை)
216 உயிர்மெய்யெழுத்துக்கள் (க முதல் னௌ வரை)
1 ஆய்தம் (ஃ)
ஆக தமிழ் எழுத்துக்கள் 247
உயிரெழுத்துக்களில்-
அ இ உ எ ஒ -இவை ஐந்தும் குறில்
ஆ ஈ ஊ ஏ ஐ ஊ ஔ -இவை ஏழும் நெடில்.
18-மெய்யோடும் 5-உயிர்க்குறிலும் சேர்வதால் 90 உயிர்க்குறில் ஆகும். இத்துடன் 5-உயிரும் சேர்ந்தால் 95உயிர்க்குறில் ஆகும்.
18-மெய்யோடும் 7-உயிர்நேடிலும் சேர்ந்தால் 126உயிர்நேடிலாக மாறும். அத்தோடு 7-உயிர்நேடிலும் சேர்த்தால் 133-உயிர்நெடில் ஆகும்.
மெய்யெழுத்துக்கள் 18-ம் ஆய்தம் ஒன்றும் (19)-ஒற்றுக்கள் ஆகும்.
செய்யுள் இலக்கணத்தில் எழுத்துக்களை குறில் நெடில் ஒற்று எனும் மூன்று வகையாகப் பிரிப்பர்.
இனி அடுத்தவாரம் அசையைப் பற்றிப் பார்ப்போமா? வணக்கம்.
அகரம்.அமுதா
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
பதிலளிநீக்குசெய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்.
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செபுவர் புலவர்.
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்.
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்.
மனனம் செய்வதற்காக தட்டச்சியது....
நந்து கலக்குறிங்க போங்க!
பதிலளிநீக்குஇன்னும் நிறைய படிக்கணும் மேடம்...
பதிலளிநீக்குவணக்கம். 'வெண்பா எழுதலாம் வாங்க' கண்டேன். நல்ல முயற்சி. இணையத்தில் இவ்வகை முதல் வலைப்பதிவு தங்களுடையதுதான் என நினைக்கிறேன். பயனாக உள்ளது. தொடர்ந்து எழுதவும்.
பதிலளிநீக்குதமிழ் மரபு சார்ந்த பல்வேறு பா வடிவங்களையும் எழுதும் முறைகளையும் இணைக்கவும். கூடவே, எடுத்துக்காட்டுப் பாக்களையும் இணைக்கவும்.
இணையம்வழி இன்பத்தமிழை
இணைந்து வளர்ப்போம்!
அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்,
மலேசியா.
ஆமாங்க அமுதா. இப்படி யாராவது அடிப்படையிலிருந்து எழுத மாட்டார்களா என்று இருந்தேன். இனி ஒழுங்காகப் படிக்கிறேன்! மிக்க நன்றி!
பதிலளிநீக்குவாங்க கவிநயா! தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது! -அன்புடன் அகரம்.அமுதா
பதிலளிநீக்குசுப. நற்குணன் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
பதிலளிநீக்குஅமுதாக்கா. அருமையான பதிவு. ஒரு சிறு திருத்தம். ஆக தமிழ் எழுத்துகள் 216 என்று எழுதியிருக்கிறீர்கள். அது 247 அல்லவா?
பதிலளிநீக்குஅமுதா அக்கா, இன்னுமொரு திருத்தம். "18-மெய்யோடும் 7-உயிர்நேடிலும் சேர்ந்தால் 216உயிர்நேடிலாக மாறும்" இவ்வாறு இருக்கிறது. இது 216 அல்ல, 126. தட்டச்சுப் பிழை என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் வெண்பா பயிற்சி முயற்சி மிக அழகு. நன்றிக்கா.
வாருங்கள் நண்பர் ஒளியவன் அவர்களே! தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி யளிக்கிறது. பாடத்தில் உள்ள பெரும் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். தொடர்ந்து வருக. தங்களின் பேராதரவைத் தருக!
பதிலளிநீக்கு//உயிர்நேடிலும்// /133-உயிர்நெடில் /
பதிலளிநீக்குஎன்ன வித்தியாசம்... எழுத்துப்பிழையா??
//12 உயிரெழுத்துக்கள் (அ முதல் ஔ வரை)
பதிலளிநீக்கு18 மெய்யெழுத்துக்கள் (க் முதல் ன் வரை)
216 உயிர்மெய்யெழுத்துக்கள் (க முதல் னௌ வரை)
1 ஆய்தம் (ஃ)
ஆக தமிழ் எழுத்துக்கள் 216//
இது சரியா? நான் கணக்குப் போட்டேன் 247 வருது... கொஞ்சம் விளக்கனும்...
கொஞ்சம் பிழை இருப்பதாக தெரிகிறது மாற்றிவிட்டால் படிக்க சுலபம் என நினைக்கிறேன்...
பதிலளிநீக்குஎழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
பதிலளிநீக்குசெய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்.
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செபுவர் புலவர்.
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்.
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்.
மனனம் செய்வதற்காக காப்பி பேஸ்ட் செய்தது!
என்னையும் (மாண்புமிகு)மாணவனாகச் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஎழுத்தசைச் சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உருப்பெனச் செப்புவர் புலவர்!
(இது பார்க்காம தட்டச்சியது)
வாருங்கள் சிபி அவர்களே உங்களை வருக வருக என வரவேற்கிறேன். நன்றி!
பதிலளிநீக்குவருக விக்னேஷ்! தாங்கள் சுட்டியுள்ள பிழையை முன்பே நண்பர் ஒளியவனும் சுட்டியிந்தார். அப்பொழுதே இடுகைக்குச் சென்று அதை மாற்றியமைத்தேன் ஆனால் எப்படியோ மாறாமல் இருந்திருக்கிறது. தாங்கள் கண்டுபிடித்துச் சுட்டியமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! ஆதரவு தருக!
பதிலளிநீக்குபாடம் ஒன்றிலிருந்து..
பதிலளிநீக்குஇதோ வந்து விட்டேன். சேர்த்துக் கொள்கிறீர்களா அமுதா?
//எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்//
தெரிந்த வரிகளேயாயினும் தெளிவு பெற உதவும் பாடங்களாக- வரவிருக்கும் உங்கள் பதிவுகளுக்கும் சேர்த்து எனது வணக்கங்கள்!(தற்போது எங்களுக்கெல்லாம் குரு அல்லவா?)
வாங்க மஹாலட்சுமி! தங்களை வருக வருக என வரவேற்கிறேன். நிச்சயம் நீங்கள் நம் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். நாளையிலிருந்து வெண்பா விளையாட்டிருக்கிறது. வெண்பா எழுதத்தெரியும் என்றால் அதில் கலந்து கொண்டுக் கலக்குங்கள்.
பதிலளிநீக்குநல்ல, தேவையான முயற்சி. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குதட்டச்சுப் பிழைகளைத் தவிர்க்கவும்.
//உருப்பியலுக்குச் செல்வது நன்று//
உறுப்பியல் என்று நினைக்கிறேன்.
வாங்கள் வடகரை வேலன் அவர்களே! சற்றேறக் குறைய மூன்று மாத காலமாகத்தான் கணினி கையாளக் கற்றுவருகிறேன். தட்டச்சு செய்யும் போது இதுபோல் பிழை வந்து விடுகிறது, இனிவரும் இடுகைகளை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்துவிட்டு இடுகையேற்றுகிறேன். நன்றி!
பதிலளிநீக்குநாளைமுதல் வெண்பாப் போட்டிவேறு இருக்கிறது. நேரமிருப்பின் கலந்துகொள்ளவும். நன்றி!
வெண்பாவை மீண்டும் முறையாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே! விரைவாகக் கற்று பாப்புனைய வேண்டுகிறேன். வாழ்க
பதிலளிநீக்கு//எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
பதிலளிநீக்குசெய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்//
இந்த சூத்திரம் எந்த நூலில் இருக்கிறது??
அறியத் தாருங்கள்... மிகவும் நன்றி.
மின்னஞ்சல் : srisuga2278@yahoo.com
நன்னூல் அய்யா!
பதிலளிநீக்குஐயா,
பதிலளிநீக்குமுன் எழுதிய வெண்பா பிழை. மாற்றிக் கீழே எழுதியிருக்கிறேன் தங்கள் பார்வைக்காக :-
அகரம் அமுதா அய்யா அவர்கள்
பகர்ந்தார் இலக்கணப் பாட்டு - நகரத்
தமிழறியா தமிழன் தலைக்குள்ளே தைத்தார்
அமிழ்தினும் இனிய தமிழ்.
- மாசிலா கண்ணப்பன்