திங்கள், 3 நவம்பர், 2008
29.சொற்பொருள் பின்வரு நிலையணி!
செய்யுளுள் முன்வந்த அதே சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறுபொருளைத்தராமல் அதே பொருளைத்தருமானால் அதற்குச் சொற்பொருட்பின்வரு நிலையணி என்று பெயர்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு!
இக்குறளில் விளக்கு எனுஞ்சொல் பலமுறை வந்து தந்தபொருளையே மீண்டும் மீண்டும் தந்துநின்றமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.
செல்வத்துட் செல்வம் செவிச்செல்லம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை!
செல்வமென்ற சொல் பன்முறை வந்து தந்தபொருளையே தந்தமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்!
சொல்லுக சொல்லிற் பயனுடைய செல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்!
அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள!
இப்பாடல்களில் ஒருசொல் பன்முறை தோன்றி ஒருபொருளிலேயே நின்றமையான் இவையாவும் சொற்பொருட் பின்வரு நிலையணியாகும்.
இக்கிழமைக்கான ஈற்றடி:-
அகரம்.அமுதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணக்கம். நலமா?
பதிலளிநீக்குதங்களின் 'இலக்கிய இன்பம்' இன்னும் புதிய இன்பத்தை வழங்காமல் உள்ளது. நீண்ட காலம் காத்திருக்கிறோம். விரைவில் புதியதொரு இலக்கிய இன்பத்தைப் பரிமாறவும்.
அந்தப் பதிவிலே மெரட்டினாலும், இதிலே நல்ல காரியம் பண்ணிப் போட்டிருக்கீங்க. நன்றிங்க
பதிலளிநீக்குநன்றி உயர்திரு சுப நற்குணன் அய்யா அவர்களே! என் மடிக்கணினி ஓரிரு மாத காலமாக பழுதடைந்திருந்தமையால் பதிவுகளைத் தொடர முடியவில்லை. இனி வரும் நாட்களில் புதுப் பொலிவுடன் இடுகைகளை அளிக்க முயல்கிறேன். தங்களின் எதிர்பார்ப்பகளுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி ஐயா!
பதிலளிநீக்குமிக்க நன்றி விஜய் பாலாஜி அவர்களே! ஏதோ என்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.
சொற்பொருள் பின் வரும் நீலை அணி
பதிலளிநீக்கு