திருக்குறள்!

செவ்வாய், 5 மே, 2009

வெப்பம் உயரும் உலகு!

இக்கிழமைக்கான ஈற்றடி: "வெப்பம் உயரும் உலகு!"

8 கருத்துரைகள்:

பெயரில்லா சொன்னது…

சேமிக்கும் செயல்மறந்திட் டீரோ உமக்குமச்
சாமிக்கும் தான்வெளிச் சம் :-))))

பெயரில்லா சொன்னது…

மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
பிட்டுண்டு மண்சுமந்த பெம்மான் கட்டுண்டு
பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே
வட்டெடுத்து வற்றிய மணற்பரப் பெங்கிலும்
தொட்டவிடம் நீரூரும் தொன்மையும் விட்டகல
கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து
பட்டறைப் புன்னீர் பாயவும்நஞ் சாமாலை
கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்
ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்
இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு
வெப்ப முயரு முலகு

பெயரில்லா சொன்னது…

தளைதட்டும் பாவிட்டுத் தாழ்ந்தேன் பிழைபொறுப்பீர்
களைதட்டிய பாடல் கவர்ந்து.

தாழ்ந்தேன்னு சொன்னது சும்மா ஊலூலாயி. மோனை வேணும்னு மெனக்கெட்டது. நாங்களும் தப்பு விடுவம்ல.

மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
பிட்டுண்டு மண்சுமந்த பெம்மானுங் கட்டுண்டு
பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே
வட்டெடுத்து வற்றிய மணற்பரப் பெங்கிலும்
தொட்டவிடம் நீரூரும் தொன்மையும் விட்டகல
கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து
பட்டறைப் புன்னீரைப் பாய்ச்சவும்நஞ் சாமாலை
கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்
ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்
இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு
வெப்ப முயரு முலகு

சொன்னது…

மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்
கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்
கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட
வெப்பம் உயரும் உலகு !

சொன்னது…

அருமையான பாடல் வாழ்த்துகள் மகேஷ் அவர்களே.!

சொன்னது…

வணக்கம் பெயரில்லாதவரே! அருமை. அருமை. பொருட்செறிவு கருதி தளைதட்டுதலைப் பொறுத்துக்கொள்ளலாம். வாழ்க நீர். வளர்க உம் வெண்பா ஆற்றல்.

சொன்னது…

வற்றிய மணற்பரப் பெங்கிலும் -என்னுமிடத்தில் மட்டும் தளைதட்டுகிறது. சற்றே மாற்றலாம் எனக்கருதுகிறேன்.

மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
பிட்டுண்டு மண்சுமந்த பெம்மானுங் கட்டுண்டு
பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே
வட்டெடுத்து வற்று மணற்பரப் பெங்கிலும்
தொட்டவிடம் நீரூறும் தொன்மையும் விட்டகல
கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து
பட்டறைப் புன்னீரைப் பாய்ச்சவும்நஞ் சாமாலை
கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்
ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்
இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு
வெப்ப முயரு முலகு

சொன்னது…

அருமை, அருமை! பெயரில்லாதவரே!

Blog Widget by LinkWithin