ஞாயிறு, 10 மே, 2009

உய்வதும் வாழ்வா உணர்

இக்கிமைக்கான ஈற்றடி:- "உய்வதும் வாழ்வா உணர்!"

5 கருத்துகள்:

  1. ரோட்டோரம் தண்ணிபோட்டு போனாரு முன்சாமி
    'ஊட்டுலசொல் லிக்கினியா?' பஸ்காரர் - கேட்டாரு.
    மெய்மறந்து நிற்கின்ற முன்சாமி, இப்படி
    உய்வதும் வாழ்வா உணர்.

    பதிலளிநீக்கு
  2. புறங்கூறி வாழ்வை நகர்த்தும் மனமே
    அறங்கூறி வாழ்வாய் இனிமேல் - திறமற்ற
    பொய்களைப் பேசித் திரிந்தே இவ்வாறு
    உய்வதும் வாழ்வா உணர்

    விவேக்பாரதி

    பதிலளிநீக்கு
  3. அழகிய கருத்து! வெண்பா எவ்வளவு பெரிய ஆளையும் சருக்கச் செய்துவடும்

    திரிந்தே இவ்வா(று) + உய்வதும் =தளைதட்டுகிறது பார்த்தீர்களா

    பதிலளிநீக்கு
  4. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
    அறங்கூறும் ஆக்கம் தருமே - மறந்தேனும்
    பொய்சொல்லி வாழற்க! அவ்வாறு பொய்சொல்லி
    உய்வதும் வாழ்வா உணர்!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com