சனி, 9 மே, 2009

தண்ணென மாறும் தழல்!

இக்கிழமைக்கான ஈற்றடி:- "தண்ணென மாறும் தழல்!"

6 கருத்துகள்:

  1. அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும்
    தங்கமெல்லாம் தானுருகி தனியுருவம் கொண்டதுபோல்
    கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே
    தண்ணெண மாறும் தழல்.

    பதிலளிநீக்கு
  2. அழகிய தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வெண்ணிலா காயும் இரவில் இருட்டிலே
    பெண்ணிலா என்னையும் கண்டதால் - உண்மையில்
    கண்ணும் சிமிட்டாது நின்றதவள் பேச்சாலே
    தண்ணென மாறும் தழல்

    விவேக்பாரதி

    பதிலளிநீக்கு
  4. கண்காணாத் தூரத்தில் கானகத்தில் கண்ணான
    என்னவளைக் காணாது நானிருக்க - பொன்னான
    எண்ணத்தில் கண்ணான என்னவள் வந்ததால்
    தண்ணென மாறும் தழல்!

    கண்காணாத் தூரத்தில் கண்ணான என்னவளைக்
    காணாது நானிருக்க கண்டேனே - பொன்னான
    எண்ணத்தில் என்கனவில்! என்னவள் வந்தாலே
    தண்ணென மாறும் தழல்!

    பதிலளிநீக்கு
  5. உள்ளம் குளிர்ந்தேன் உம்பாவில்; என்கண்ணில்
    வெள்ளம் நிறைந்தேன்; மிகையாமோ? -அள்ளக்
    குறையாக் கலம்போலக் கொஞ்சுதமிழ்ப் பாக்கள்
    நிறைவாய்த் தருகின்றீர் நீர்!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com