திங்கள், 2 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 2

ஓரடியில் மூன்று சீர்கள் வரவேண்டும் என்பதை முன்பே அறிவோம்.

கீழ்காணும் பாவிற்கான தளைகள்

தேமா + கூவிளம் + கூவிளம்

உண்மை என்றொரு பண்பினை
ஒண்மை யாகநாம் கொண்டிடின்
வெண்மை அகு(ம்)நம் உள்ளமே
மண்ணில் வாழலாம் மன்னியே! -புலவர் அரங்க. நடராசன்

7 கருத்துகள்:

  1. ஓய்வு பெற்றதும் ஓய்வகம்
    சேய்கள் சார்ந்தவர் சிந்தனை
    தாய்தந் தையரும் தாழ்வரோ
    நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?

    பதிலளிநீக்கு
  2. /தாய்தந் தையரும்/ - சொல்லும்போது தளை தட்டுதோன்னு தோணுது..

    மாற்றிய பா இதோ:

    ஓய்வு பெற்றதும் ஓய்வகம்
    சேய்கள் சார்ந்தவர் சிந்தனை
    தாய்தந் தைத்தனி மைதனில்
    நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?

    பதிலளிநீக்கு
  3. உண்ணும் பிள்ளையும் உன்னுளில்
    உண்பிப் போனுமுன் உள்ளினில்
    கண்ணில் தென்படும் காட்சியும்
    கண்ணன் சாட்சியே, கண்ணனே!

    இதைப் பார்த்ததன் விளைவு:
    http://www.youtube.com/watch?v=f227UYDJ7EU

    ஆழ்ந்த சமூக உணர்வும இறையுணர்வும் ஒன்றே.

    பதிலளிநீக்கு
  4. வஞ்சி மண்டிலம் (தேமா + கூவிளம் + கூவிளம்)

    கோவ ணத்தினைக் கொண்டருங்
    கோவ கந்தையைக் கொன்றவன்
    பாவ புண்ணியம் போக்குவன்
    தேவ ருந்தொழுந் தீயவன்.

    பதிலளிநீக்கு
  5. ஆகா..அருமை..!அருமை..!திரு.அவனடிமை ஐயாவின் வழியில்..

    பாவ சூனியம் போக்கியே
    பாவி நல்லவர் ஆக்கியே
    தேவன் குன்றினில் சேர்த்திடும்
    காவல் தெய்வமே தர்மமாம்!

    தேடித் திண்ணலாம் யாவுமே!
    மாடி வீட்டிலும் வாழலாம்!
    வாடி நின்றிடும் போதிலே,
    ஓடிச் செய்திடு நன்மைகள்!

    வண்ண வண்ணமீன் வானிலே
    சின்னக் கண்களால் நோக்கிடும்
    எண்ணம் கூடியே தேங்கிடும்
    வன்னம் காலையில் ஓடிடும்!

    நீரின் கோலமே வாழ்க்கையாம்
    பாரின் நாட்களும் கொஞ்சமாம்..
    ஊரில் சிற்றிடம் வேண்டினால்
    தேறு புண்ணியம் தேற்றிடு!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  6. அவனடியார் மற்றும் அண்ணாமலையாரின் பாக்கள் அருமை. அருமை. அவனடியாரின் காணலைக்காட்சிக்கான கவிதையும் அருமையாக உள்ளது. வாழ்க

    பதிலளிநீக்கு
  7. 'ன்னை 'ண்னென எண்ணவும்
    உன்னல் உண்ணலென் றாகுமே
    மன்னன் மண்ணனாய் மாறுவான்
    கின்னம் கிண்ணமாக் கண்டிடும்.

    ;-)

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com