செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 3

விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.

நல்லவர் நட்பினை நாடுகவே
அல்லவர் நட்பினை அகலுகவே
வல்லவர் ஆகவே வாழுகவே
இல்லையோர் நன்மையும் இதனினுமே! -புலவர் அரங்க. நடராசன்

6 கருத்துகள்:

  1. வஞ்சி மண்டிலம்-3 (விளம் + விளம் + காய்)

    அறுசுவை அனுதினம் அமிழ்ந்திடுவேன்
    வறுத்ததும் மரித்ததும் மகிழ்ந்துண்பேன்
    இருதயம் ஒருமுறை இடரிடவும்
    தருதழை தண்டிலை தருவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. ’தருவிடுவேன்’ என்று ஒரு சொல் இல்லை என்கிறார் வாழ்க்கைதுணை. தரு=மரம், தழை, தண்டு, இலை என்று உண்டிடுவேன் என்ற பொருளில் எழுத வந்தேன். ஆனால் சரியாக வரவில்லை. சிறிது விட்டு முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அறுசுவை அனுதினம் அமிழ்ந்திடுவார்
    வறுத்ததும் மரித்ததும் மகிழ்ந்துண்பார்
    இருதயம் ஒருமுறை இடரிடவும்
    வெறுப்புடன் இலைதழை மென்றிடுவார்.

    :-) - பாவென்றால், சிறிது நகைச்சுவை உணர்வு வேண்டாமா ?

    பதிலளிநீக்கு
  4. தரு +தழை -தருதழை எனச் சொல்லமுடியாது. தழைஎன்பது சிறிதாகவும், குழையும் தன்மையுடையதாகவும், மென்மையாகவும் இருக்கவேண்டும். துளிருக்கு அடுத்த நிலை தழை எனலாம். தழைக்கு அடுத்த நிலை இலை ஆகும்.

    இங்கு தருஓலை என்பதே சரியாகும் எனக்கருதுகிறேன். மாற்றுக் கருத்திருப்பின் உரைக்க.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா பாக்கள் அருமை. அவனடிமையாருக்கே உள்ள தனித் தன்மை. மிக சுவையாக பாக்களை மாற்றியமைத்துள்ளார். பாச்சுவை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய்
    அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
    பெரியவர் சிறியவர் செய்கையினால்
    தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com