எளிமையும் புதுமையும் என்ற முந்தைய பாடத்தில், இக்காலத்தில் எளிமையாகவும் புதுமையாகவும் பாக்கள் புனைந்துவருவதைப்பற்றிப் பார்த்தோம். ஆகையால் எளிமையும் புதுமையும் இக்காலத்திற்குரியது எனக்கருதிவிட வேண்டாம். முற்காலத்தில் செய்த அளவிற்குப் புதுமையும் எளிமையும் இன்றளவும் யாரும் செய்துவிடவில்லை. செய்ததாக வேண்டுமாயின் சொல்லிக்கொள்ளலாம்.
கீழ்வரும் பாடல் வ.உ.சா அவர்களின் அரிய முயற்சியால் தேடிக்கண்டு பிடிக்கப்பட்ட “கிளவித்தெளிவு” என்ற சங்க இலக்கியத்தின் ஒரு பாடலாகும். காண்க.
கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்
கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால்
மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால்
தேனொக்கும் என்றன் திரு!
இப்பாடலில் புரியாத தெரியாத சொல் என்று எதுவும் உள்ளதா? சங்கப்பாடல்களில் இதுபோன்று சொற்களை எளிமையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாக்கள் உள்ளன.
உலகறிந்த திருக்குறள் எளிமையான சொற்களைக் கொண்டு தொன்றிய நூலேயாகும்.
அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு! --தொடங்கி…
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முழங்கப் பெறின்! --வரை 1330 பாக்களுள் ஓரிரு நூறு பாக்களே சொற்பொருள் பார்த்துப் படிக்கக் கூடியதாக இருக்கும். மற்றவை அனைத்தும் மிக மிக எளிய சொற்களால் ஆனதே!
கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை!
இப்பாவில், இன்னிசை அளபெடையை நீக்கிவிட்டால் ---
கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை!
அளபெடை நீக்கப்பட்ட இப்பாட்டைப் பாருங்கள். நாம் இன்று பயன்படுத்துகின்ற அதே சொற்களை அல்லவா அன்று வள்ளுவனும் பயன்படுத்தியிருக்கிறான். இப்படிச் சான்றுகள் நிறைய காட்டிக்கொண்டே செல்லலாம்.
மேற்கண்டவை போன்று எளிமையை மட்டும் செய்துவிட்டுப் புதுமை காணாது விட்டுவிடவில்லை நம்முன்னோர். பற்பல புதுமைகளையும் செய்திருக்கிறார்கள்.
காட்டிற்கு ஒன்று.
செங்கண் கருங்கோட் டெருமை சிறுகனையா
அங்கண் கழனிப் பழனம்பாய்ந் –தங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடித்
தவளையும்மேற் கொண்டு வரும்!
ஓர் எருமை நீர்நிலைகளில் திரிந்து பின் கரையேறி வருகிறது. அப்படி வரும்போது அதன் முதுகுப்புறத்தில் குவளை மலர்களும், செங்கயல் மீன்களும், தவளைகளும் இருப்பதாக எருமையைக் கதாநாயகனாக்கிய பாடல்.
அறத்தைப் பாடவும், மக்களின் வாழ்வியல் நெறிகளைப் பாடவும், அரசர்களைப் பாடவும், காப்பியம் பாடவும் பயன்படுத்தப் பட்ட பாக்கள் ஓர் மிகமிக எளிய காட்சியைப் பாடவும் பயன்படுத்தப் பட்டிருப்பது கண்டு வியப்பாகவே உள்ளது. இவைப்போன்ற புதிய முயற்சிகளை அன்றைக்குப் பலரும் ஏற்றுக்கொண்டார்கள். காரணம் எத்துணைப் புதுமையாக எழுதினாலும் அவை, கவிதைகளாக இருந்தமையே. அதாவது பாவோட்டத்திற்கான அனைத்துத் தன்மைகளும் பொருந்தியமையே!
ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டு
ஒன்பது பத்துப்பதி னொன்றுபன்னி –ரெண்டுபதி
மூன்றுபதி நான்குபதி ஐந்துபதி னாறுபதி
னேழ்பதி னெட்டுபத்தொன் பது!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காளமேகத்தால் எழுதப்பட்ட பாடல் பொருளற்ற ஆனால் பலரையும் வியக்கவைக்கும் ஆற்றலுள்ள பாடல்களின் ஒன்று.
அவ்வையாரின் அனைத்துப் பாடல்களும் புதுமையும், எளிமையும் நிறைந்ததே.
அணுவைத் துளைத்தேழ் கடலை புகுத்திக்
குறுகத் தறித்த குறள்! –என்றெழுதி விஞ்ஞானத்தாலும் அன்று கண்டறியப்படாத அணுவைத் தன்பாட்டில் வைத்துப் புதுமை படைக்க முடிந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா!
ஆக, புதுமையும், எளிமையும் இக்காலத்திற்கே உரியதல்ல. அது தொன்றுதொட்டு வருவது. நாம் எத்துணைப் புதுமை, எளிமை செய்யப்புகுந்தாலும் மரபின் தன்மை மாறாமலும், தமிழின் கட்டுக்கோப்பைச் சிதைக்காமலும் எழுதிவருவோமாயின் அதுவே மிகப்பெரிய புரட்சிதான். புரட்சிக்கவி எனப் பெயரெடுத்த பாரதி தாசன்கூட தமிழ் இலக்கணத்திற்கும், தமிழ்மரபிற்கும் உட்பட்டே தனது புரட்சிகரமான கருத்துக்களை வழங்கினார்.
ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எளிமைசெய்ய எழுந்திருங்கள் அதுபோது தமிழ்மரபு சிதையா வண்ணம் அதை நிகழ்த்தப் புறப்படுங்கள்.

மேலுள்ள படத்திற்குப் பொருத்தமான வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.
இக்கிழமைக்கான ஈற்றடி:- இன்னல் அகலும் இனி!

அகரம் அமுதா