இணைய இதழாகிய கீற்று.காமில் அறிவுமதி அவர்களின் "என்றும் நிகழ்காலம்" என்ற தலைப்பிலான ஓர் குறுங்கவிதையைப் படிக்க நேர்ந்தது! வியந்தேன், வியந்தேன், வியந்துகொண்டே இருக்கிறேன். இதன் பொருளை நன்குணர்ந்து வெண்பாவில் வழங்க யாவரையும் வேண்டுகிறேன்.
உங்களை வியப்பில் ஆழ்த்திய இந்தக் கவிதை என்னை மலைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சுருங்கச் சொல்லுவதில் புதிய உயரத்தை அறிவுமதி அவர்கள் எட்டியிருக்கிறார். இதை வெண்பா வடிவில் காண மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

விளம்பர யுகத்தில் வெத்துப் பேச்சினாலும், (முக்கால்வாசி, கணினியின் துணையால்) அதிரடி செய்திகளாலும் மனிதரையோ, நிகழ்வுகளையோ, தரத்தையோ பெரிதாக்கியும், இல்லாததை இருப்பதாகவும் காட்டும் இந்நாளில், நாட்பட, நாட்பட அனுபவத்தில் அவை சாதாரணமாகத் தெரியும் - என்று எடுத்துக் கொண்டேன் அவர் கவிதையை.
வேறு பொருள் மறைந்திருந்தால் கூறவும்.
நிற்க.
'நாட்பட நாட்பட' என்று சொற்றொடர் பழைய கண்ணதாசன் பாட்டை நினைவு கொள்ளச் செய்தது:
'நண்பரும் பகை போல் தெரியும் - அது நாட்பட நாட்படப் புரியும்'
so, செய்திகளால் (நிகழ்வுகளால்) மனிதனாக (சாதாரணமாக) தெரிபவர்கள், பல சமயங்களில் காலத்தால் (வரலாற்றால்) கடவுளாக (அருமையாகத்) தெரியலாம். [உதா. உங்களிடம் அன்பு செலுத்தி அக்கறை செலுத்தும், ஆனால் தற்சமயம் எரிச்சலூட்டும், பெற்றோர், உடன்பிறப்புகள்; காந்திஜி, பகவான் ரமண மகர்ஷி போன்ற பெரியோர்]
அவனடிமை அவர்களுக்கு! அழகான மறுமொழி அளித்துள்ளீர்கள்!
////வேறு பொருள் மறைந்திருந்தால் கூறவும்.////
மாண்டும் மீண்டும், மீண்டும் மாண்டும் கொண்டிருக்கிற எமது ஒப்பற்ற உலகத்தமிழினத்தலைவனை இவ்வரிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள் அய்யா! அவ்வரிகளுக்கு உண்மையான பொருள் புரியும்!
வஞ்சத்தால் வாய்மை இழந்தவர் -திரு.இராச பக்சே. உண்மை நெஞ்சத்தான் - தமிழர் தலைவன்.
பஞ்சினை நெருப்பிலிட்டால் உடனே கருகி அழிந்துவிடும். தீச்செயலால் வந்த புகழ் காலத்தால் அழிந்து பயனற்றதாகிவிடும். ஆனால் அப் பஞ்சையே திரியாக்கி சரியான வழியில் பயன்படுத்த தான் அழிந்தாலும் மற்றவருக்காகவே ஒளிவீசி வழிகாட்டி அழியும்.
என்னாலும் வியக்காமல் இருக்க முடியவில்லை அகரம் அமுதா.அண்ணனின் மதியை!
பதிலளிநீக்குபின்புலப் படத்திலுள்ள பாதச்சுவடே கவிதையின் கருப்பொருளை...அடடா...அடடா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் கண்ணன் அவரகளே! மீண்டும் வருக! ஆதரவு தருக!
பதிலளிநீக்குஅதுதான் எதிர்காலம்.,
பதிலளிநீக்குகவிதை அருமை
வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே!
பதிலளிநீக்குஉங்களை வியப்பில் ஆழ்த்திய இந்தக் கவிதை என்னை மலைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சுருங்கச் சொல்லுவதில் புதிய உயரத்தை அறிவுமதி அவர்கள் எட்டியிருக்கிறார். இதை வெண்பா வடிவில் காண மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

பதிலளிநீக்குசிந்தனையைத் தூண்டும் வரிகள். பதித்ததற்கு நன்றி...
பதிலளிநீக்குவிளம்பர யுகத்தில் வெத்துப் பேச்சினாலும், (முக்கால்வாசி, கணினியின் துணையால்) அதிரடி செய்திகளாலும் மனிதரையோ, நிகழ்வுகளையோ, தரத்தையோ பெரிதாக்கியும், இல்லாததை இருப்பதாகவும் காட்டும் இந்நாளில், நாட்பட, நாட்பட அனுபவத்தில் அவை சாதாரணமாகத் தெரியும் - என்று எடுத்துக் கொண்டேன் அவர் கவிதையை.
வேறு பொருள் மறைந்திருந்தால் கூறவும்.
நிற்க.
'நாட்பட நாட்பட' என்று சொற்றொடர் பழைய கண்ணதாசன் பாட்டை நினைவு கொள்ளச் செய்தது:
'நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்'
so, செய்திகளால் (நிகழ்வுகளால்) மனிதனாக (சாதாரணமாக) தெரிபவர்கள், பல சமயங்களில் காலத்தால் (வரலாற்றால்) கடவுளாக (அருமையாகத்) தெரியலாம்.
[உதா. உங்களிடம் அன்பு செலுத்தி அக்கறை செலுத்தும், ஆனால் தற்சமயம் எரிச்சலூட்டும், பெற்றோர், உடன்பிறப்புகள்; காந்திஜி, பகவான் ரமண மகர்ஷி போன்ற பெரியோர்]
அவனடிமை அவர்களுக்கு! அழகான மறுமொழி அளித்துள்ளீர்கள்!
பதிலளிநீக்கு////வேறு பொருள் மறைந்திருந்தால் கூறவும்.////
மாண்டும் மீண்டும், மீண்டும் மாண்டும் கொண்டிருக்கிற எமது ஒப்பற்ற உலகத்தமிழினத்தலைவனை இவ்வரிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள் அய்யா! அவ்வரிகளுக்கு உண்மையான பொருள் புரியும்!
கவிதையைப் படிக்கும்போதே இந்தக் கவிதையை எம் தலைவரைப் பற்றியது தான் என்பது
பதிலளிநீக்குதமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவருக்கும் புரிந்துவிடும்.
நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பதிலளிநீக்குவஞ்சத்தால் வாய்மை இழந்தான் பெரும்புகழ்
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை
நெஞ்சத்தான் செய்த வினை.
வஞ்சத்தால் வாய்மை இழந்தவர் -திரு.இராச பக்சே.
உண்மை நெஞ்சத்தான் - தமிழர் தலைவன்.
பஞ்சினை நெருப்பிலிட்டால் உடனே கருகி அழிந்துவிடும். தீச்செயலால் வந்த புகழ் காலத்தால் அழிந்து பயனற்றதாகிவிடும். ஆனால் அப் பஞ்சையே திரியாக்கி சரியான வழியில் பயன்படுத்த தான் அழிந்தாலும் மற்றவருக்காகவே ஒளிவீசி வழிகாட்டி அழியும்.
குறள் வடிவில்
நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.
பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்
அழிக்கும் விழலாய் விரைந்து.
நாலடி வெண்பா அருமை! நறுக்குத் தெறித்தாற்போல் உள்ளது. வாழ்த்துக்கள் உமா அவர்களே!
பதிலளிநீக்குகுறள் வெண்பா தங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது. ஒருபொருளையே நாலடிவெண்பாவாகவும், குறள் வெண்பாவாகவும் தருவது இலகுவான ஆற்றலல்ல. பிண்ணியெடுக்கிறீர்கள். தொடர்க.