சனி, 25 ஜூலை, 2009

ஈயூர இல்லை இடம்!

அடுத்த பாடத்தை இன்னும் இரு நாட்களின் தருகிறேன். அதற்குமுன் ஓர் ஈற்றடி. சவுக்கடியார், "சொல்லே மிகவும் சுடும்" என்ற ஈற்றடிக்குச் செய்தளித்த பாப்போல இன்றைய நாட்டு நடப்போடு பொறுத்திப்பார்த்து எழுத வேண்டுகிறேன்.

இனி வரும் பாடங்களில் ஒரு நிழற்படம் அல்லது குறும்படம் வழங்கப்படும். அவற்றிற்கும் பொறுத்தமான பாவடிக்க வேண்டுகிறேன்.



இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈயூர இல்லை இடம்!

அகரம் அமுதா

28 கருத்துகள்:

  1. படப்பாடல்:-


    அஞ்சி வெருவி அயிர்த்தொதுங்கப் பார்க்குமக்
    குஞ்சும் தளர்ந்து குலைநடுங்கக் -கொஞ்சித்
    தழுவவரும் பூனையதன் தாயுள்ளம் காண
    எழுகிறதே இன்பம் எனக்கு!

    பதிலளிநீக்கு
  2. படப்பாடல்:-

    பூனையிதற் குள்ள புகழுள்ளம் சிங்களர்தஞ்
    சேனைக் கிருந்திருப்பின் செத்தொழியார்! -மானத்
    தமிழீழ மக்கள் தலையெடுப்பர் ஓர்நாள்
    நமதீழம் தோன்றுமந் நாள்!

    பதிலளிநீக்கு
  3. /பூனையிதற் குள்ள புகழுள்ளம் சிங்களர்தஞ்
    சேனைக் கிருந்திருப்பின் செத்தொழியார்! -மானத்
    தமிழீழ மக்கள் தலையெடுப்பர் ஓர்நாள்
    நமதீழம் தோன்றுமந் நாள்!/

    இத்தனையும்
    இருந்தால்
    இத்தரையில் ஏன்
    இந்த இன்னல்

    பதிலளிநீக்கு
  4. புசுபுசு பூனை புதிதான கோழிச்
    சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுப்பாய்
    "நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
    ஈயூர இல்லை இடம்!"

    பதிலளிநீக்கு
  5. //////திகழ்மிளிர் கூறியது...

    இத்தனையும்
    இருந்தால்
    இத்தரையில் ஏன்
    இந்த இன்னல்//////



    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எண்ணிப்பார்க்க வேண்டிய கருத்து. உலகம் எண்ணிப்பார்க்குமா?

    பதிலளிநீக்கு
  6. ////இரா. வசந்த குமார். கூறியது...


    புசுபுசு பூனை புதிதான கோழிச்
    சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுப்பாய்
    "நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
    ஈயூர இல்லை இடம்!"//////


    ஈற்றடிக்கும், கொடுத்த படத்திற்கும் அழகாப்பொருத்தி என்னை விழக்க வைத்து விட்டீர்கள். தங்களை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

    சிறு திருத்தம்.

    பூனையின் தன்மையைச் சொல்லி, அப்பூனை கோழிக்குஞ்சின் காதில் கிசுகிசுப்பாய்ப் பின்வரும் செய்தியைச் சொன்னதா இல்லையா? பொருள் முற்றுப் பெறாமல் உள்ளது கண்டீரா?


    புசுபுசு பூனை புதிதான கோழிச்
    சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுப்பாய்
    "நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
    ஈயூர இல்லை இடம்!" என்றது. ---என்றால் தான் முற்றுப்பெறும் ஆதலாம் சிறு மாற்றம்.


    புசுபுசு பூனை புதிதான கோழிச்
    சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுக்கும்,
    "நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
    ஈயூர இல்லை இடம்!"


    கிசுகிசுப்பாய் என்பதைக் காட்டிலும் கிசுகிசுக்கும் என்பதே பொருத்தம் எனக்கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கீழ்வரும் கருத்துரை வசந்துடையது...


    dear agaram amutha..

    is there any problem in commenting..? i cant put comment now in ur
    blog. so please post the following as the comment for the latest post.
    thanks.

    அன்பு அகரம் அமுதா...

    என்று சொன்னான், என்றான் - இது போன்ற வழக்கமான வார்த்தைகளைப் பெருமளவில்
    தவிர்த்து விட்டு, சுருக்கமாகச் சொல்ல முயல்வது சிறுகதைகளில்
    மேற்கொள்கின்ற முயற்சிகளில் ஒன்று. மேலும் " " குறிகளுக்குள் எழுதும்
    வாக்கியங்கள் ஒருவர் பேசுபவை/சொல்லுபவை என்று
    படிப்பவர்களுக்குத் தெரியும் போது எதற்கு அனாவசியமாய் 'என்றது' என்ற
    வார்த்தைப் பிரயோகம்..! எதையும் சுருங்கச் சொல்லுதல் எனக்குப் பிடித்தம்.
    நான் ஒருமுறை முன்பே கூறியிருப்பது போல், முற்றாகச் சொல்லி விடாமல்
    படிப்பவர்கள் கற்பனையே முற்றுப்பெறச் செய்து விடுவதும் எனக்குப்
    பிடிக்கும்.

    நீங்கள் மாற்றிய 'கிசுகிசுக்கும்' உபயோகமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. /புசுபுசு பூனை புதிதான கோழிச்
    சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுக்கும்,
    "நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
    ஈயூர இல்லை இடம்!"/

    அற்புதமான வரிகள்

    ஈற்றடிக்கும்
    படத்திற்கும் முடிச்சுப் போட்ட மாதிரி
    உள்ளது.

    நண்பர் வசந்தகுமாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. அமுதா தலைவணங்குகிறேன் உங்கள் தமிழ் புலமைக்கு. அற்புதமான பாக்கள்.வாழ்த்துக்கள் கோடி.

    பதிலளிநீக்கு
  11. சாலையெங்கும் வாகனம் சேரும் பெருங்கூட்டம்
    காலைமாற்றி வைக்கயிட மின்றிஞாயி(று) மாலையில்
    வாயூறும் பஜ்ஜி வகையாய்,-கடற்கரையில்
    ஈயூற இல்லை இடம்.

    [சென்னையிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மெரீனா கடற்கரை தான் காசு செலவில்லா ஒரே பொழுதுபோக்கு, இங்கு விடுமுறை தினங்களில் அலைமோதும் கூட்டம்.ஒருவர் ஒருவர் இடித்துக்கொள்ளாமல் பத்தடிக்கூட நடக்க இயலாது.இங்கு வேகமாக விற்பனையாவது சுண்டலும் பஜ்ஜியும் தான். இக்காட்சியே வெண்பாவாக]

    பதிலளிநீக்கு
  12. [கட்டிட காடாகிவரும் சென்னையில் இப்பொழுது ஆங்காங்கே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கிறார்கள். சாலையோரமென்பதால் வாகன சத்தமும் இடிபடும் அபாயமுமுண்டு. அப்படிபட்ட ஒரு பூங்க்காவிற்கு பசுமை ஈர்க்க பறந்து வந்துவிடுகிறது ஒரு குருவிக்குஞ்சு. சென்னையின் சகல வித்தைகளையும் அறிந்த பூனை தாயுள்ளத்தோடு சொல்வதாஉ ஒரு கற்பனை]

    கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்
    எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்
    பேரபாய முண்டேயிப் பாதையோரப் பூங்காவில்
    வேறுபாய மில்லை உணர்.

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் உமா! மேலும் தாங்கள் எழுதியுள்ள முதல் வெண்பா அழகிய நேரிசை வெண்பாவாகும். ஓரிடத்தில்மட்டும் அசை கூடாதிருந்திருப்பின் இன்னும் சிறப்பு. இரண்டாம் வெண்பா உண்மையாக கட்டிக்கரும்பே! குறிப்பாக இரண்டாம் பாடலின் ஈற்றடி என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. சிங்கப்பூரில் தைப்பூச முருகன் விழா எப்படி இருக்கும் என்று கேட்டால், அகரம் அமுதாவின் பதில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததன் விளைவு:

    **********************************
    மயூரன் அருளொளி மங்காவிச் சிங்கையில்
    இயற்பகை யும்இல்லா ததாகும் - வாயூற
    வயலூரா னைவெல்லம் போல்மொய்க்கும் பக்தரால்
    ஈயூர இல்லை இடம்.
    **********************************

    பதிலளிநீக்கு
  18. ஆஃகா! ஆஃகா! அருமை அருமை! படித்துப்படித்துச் சிரித்தேன் அய்யா! அவனடிமை அவர்களே!

    நானெழுதியதைப்போல் எழுதி என்னை மகிழவும் படித்துச் சுவைக்கவும் வைத்துவிட்டீர்கள்.

    தன்போல் எழுதும் தகைசால் "அவனடிமை"
    என்போல் எழுதி எனைக்கவர்ந்தார் -முன்போதும்,
    இப்போதும் என்பாவில் ஏற்றிப் புனைதளையிற்
    தப்பேதும் வாராதே தான்!


    இரு இடங்களின் தளை தட்டுகின்றன.

    மயூரன் அருளொளி மங்காவிச் சிங்கையில் +
    இயற்பகை யும்இல்லா ததாகும் - வாயூற +
    வயலூரா னைவெல்லம் போல்மொய்க்கும் பக்தரால்
    ஈயூர இல்லை இடம்.

    பதிலளிநீக்கு
  19. இதோ பிடியுங்கள், தளை தட்டி முருகனையே நோக்கி நீர் கூறுவதுபோல்:

    மயூரன் அருளொளி சிங்கையில்
    சிந்த
    இயற்பகையும்* இல்லாமல் போச்சு - வயலூரா
    வாயூற உனைவெல்லம் போல்மொய்க்கும் பக்தரால்
    ஈயூர இல்லை இடம்.

    * பூனைக்கும் கோழிக்குஞ்சின் மேல் பாசம் வருவது போல் பல மொழியும் கலாச்சாரமும் கொண்ட மக்கள் ஒன்றாக, அன்புடனும் இருக்கிறார்கள் அல்லவா உங்கள் நாட்டில் ! அதையே சாடையாக குறிப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
  20. அவனடிமை அவர்களே! கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. //
    கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்
    எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்
    பேரபாய முண்டேயிப் பாதையோரப் பூங்காவில்
    வேறுபாய மில்லை உணர்.
    //

    உமா அவர்களே: வெகு ஜோர். நடை சூப்பர். அது என்னவோ தெரியவில்லை, நமக்குப் புரியும்படி சாதாரண தமிழில் (மண்ணின் வாசத்துடன் கலாச்சாரத்தை எடுத்துச் சொல்ல..- சவுக்கடி'க்கு கோபம் வரும் - கொச்சைத் தமிழ் கூட கொஞ்சம் பரவாயில்லை, ஆபாசமாக இல்லாமல்) எழுதினால் ஒரு தனி சுவைதான் (அகராதியை தேடி போகவேண்டாமே), கண்ணதாசன், பட்டுக்கோட்டை பாட்டைக் கேட்பது போல.

    அதுவும் மூவசையில் விளம் நடுவில் வரும்போது ஒரு அலைபோல சந்தம் வரும் உணர்வு.. வரியைப் படிக்கும்போதே ஒரு முறை roller coaster-இல் மேலே போய் கீழே வந்த thrill..
    (காட்டு :
    "எட்'டிய'ந்த மின்சாரக் கம்'பியி'லுன் கூட்டைச்சேர்
    பே'ரபா'ய முண்டேயிப் பா'தையோ'ரப் பூங்காவில்
    வே'றுபா'ய மில்லை உணர்" ).

    மேலும் மேலும் எழுதி மகிழ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அமுதா அவர்களே: கருத்துரை பக்கம் வழங்குவதில் (page rendering format) மாற்றம் வருத்தியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். முன்னர் இருந்த முறையில், வெண்பாவின் நாலு வரியும் அழகாக வரிசைப் படுத்தியதாக வந்தது. இப்போது வரிகள் மடக்கப் படுகின்றன. இதை பழையபடி மாற்றமுடியுமா ?
    நன்றி. (CNTRL - 1 எல்லாம் செய்து எழுத்துருவை சிறிதாக்கி பார்த்துவிட்டேன், வரி உடைப்பு போகவில்லை)

    பதிலளிநீக்கு
  23. அவனடிமை அவர்களுக்கு! தாங்கள் கோரியபடி மாற்றம் செய்துவிட்டேன் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  24. திரு அவனடிமை அவர்களே, உங்கள் வாழ்த்து என்னை வானில் பறக்கச் செய்கிறது. தங்கள் ஆசியோடு இன்னும் நிறைய சுவையாக எழுத முயற்சிக்கிறேன்.நன்றி, மீண்டும் மிண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. பாரத நாட்டிலே ஊழல் ஒழிகவெனத்
    தாரக மந்திரம் பேசிவிட்டு - பாரதத்தை
    வாயூறத் தான்சுவைக்கும் செந்நாய்கள் கூட்டமொன்றால்
    ஈயூற இல்லை இடம்

    விவேக்பாரதி

    பதிலளிநீக்கு
  26. யாரய்யா நீங்கள் வெண்பாவிற் பிண்ணி எடுக்கிறீர்களே. வாழ்க

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com