வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 5

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பிறந்தவர் புகழுற வேண்டின்
இறந்தபின் நிலைபெற வேண்டின்
பிறவுயிர் தம்முயிர் என்றே
அறிந்தவை வாழ்வுறச் செய்வீர்! -புலவர் அரங்க.நடராசன்

10 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. எந்தத் தலைப்பிலும் பல விவரங்களைச் சேகரிக்க மட்டும் உதவவில்லை வலை, அதை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது.

    மதில் மேல் உட்கார்ந்து பக்கத்து வீட்டு நண்பருடன் பகிர்ந்துகொண்ட பழைய உலகத்திலிருந்து, நம் ’கண்டுபிடிப்பை’ (அதாவது நாம் சுவைத்த செய்தியை, தகவலை, வம்பை) உலகம் முழுவதும் பரப்ப பல முறைகளைக் கொடுக்கும் வலையுலகம் வரை வந்துவிட்டோம்.

    இது நன்மைதானா இல்லை தலைவலியா ? இதோ ஒரு மாற்றுக் கோணம்:

    வஞ்சி மண்டிலம் விளம் + விளம் + தேமா

    படித்ததைப் பகிர்ந்திடப் பாய்ந்து
    அடிக்கடி வலைவழி அன்றே
    துடிப்பொடு செலுத்துவுன் தோழர்
    நொடிதொறும் நொந்தவர் நோவர்!

    பதிலளிநீக்கு
  3. மெல்லிய மலர்களில் தேனும்
    கல்லினுள் சிலையது போலும்
    சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த
    வள்ளுவன் குறளினில் நன்மை!

    பதிலளிநீக்கு
  4. பண்ணிலே பக்தியைக் கூட்டி
    கண்ணனைப் போற்றியே கோதை
    அன்புடன் சாற்றிய பாவை
    பொன்னிலே பதித்தநற் முத்தே!

    பதிலளிநீக்கு
  5. கண்ணனைப் பாடிடுங் கூட்டம்
    கன்னியர் வரைந்திடுங் கோலம்
    தண்ணெனக் குளிர்ந்திடும் காலை
    மண்ணிலே மார்கழி நாளே!

    பதிலளிநீக்கு
  6. பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய்
    என்னெதிர் வந்தனள் நீண்ட
    கண்ணிலே காதலைக் கண்டேன்
    என்னுயிர்த் தன்னையே தந்தேன்!

    கண்வழி உயிரிடம் மாற
    அன்பினால் மனங்கலந் திட்ட
    பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே
    மண்ணிலே மழையெனச் சேராய்!

    பதிலளிநீக்கு
  7. படித்திடப் பதித்திடப் பாங்காய்
    அடிக்கடி எழுதிட ஆர்வம்
    துடிப்புடன் துள்ளிடும் தோழர்
    நொடிந்துபோய் ஓடிடு வாரோ ?

    பதிலளிநீக்கு
  8. சிலி நாட்டின் சுரங்க விபத்தை நினைத்து எழுதியது:
    வாழ்வொரு சுரங்கம துள்ளே
    வீழ்ந்தவர் வெளிவர மீட்பன்
    சூழ்வினை சூரனைச் சாய்த்தோன்
    வீழ்சர வணபவ னிந்தாள்

    பதிலளிநீக்கு
  9. ஆசான் அகரம் அமுதன் அவர்களுக்கு ஆசிரிய தின வாழ்த்துக்கள்.[கொஞ்சம் தாமதம்!!!!!!!!]

    பதிலளிநீக்கு
  10. அவனடியார் மற்றும் உமா அவர்களுன் பாக்கள் ஒவ்வொன்றும் தேன்பாகன்ன சுவைமிகுந்ததாய் உள்ளன. வாழ்த்துக்கள்.

    மேலும் உமா அவர்களின் வாழ்த்துக்களை ஏற்று நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com