செவ்வாய், 25 மே, 2010

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2

(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)

1. அடிதோறும் ஏழு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

2. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3. 1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். அல்லது 1 ஆம் 7 ஆம் சீர்களில் மோனை அமையலாம்.

4. தேமா, புளிமா ஆகிய மாச்சீர்கள் இரண்டும், தேமாங்காய், புளிமாங்காய் ஆகிய மாங்காய்ச்சீர்கள் இரண்டும் மட்டுமே இப்பாவில் பெற்றுவரும். இதில் தேமாங்காய் அடியின் முதற்சீரில் மட்டுமே வரும். இடையில் எங்கும் வராது.

5. சீர்கள் முறையே—
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா

(அல்லது)

தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா

6. இவ்வகைப்பா முழுக்க முழுக்க வெண்டளையான் இயன்றது என்பதறிக.

7. 1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம். 2ஆம் 4ஆம் 6ஆம் 7ஆம் சீர்கள் கட்டாயம் இயற்சீர்களாகவே (தேமா, புளிமா) வர வேண்டும்.

8. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு. இல்லையாயினும் குறையில்லை.

காட்டுப் பாடல்கள்!

புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன்
உரைபொய் எனாது புலர்வாள்
ன்சொற் கடந்து மடமங்கை ஏவ
நிலைதேர வந்த ருளே
ன்சொற் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
உடையேன் மருங்கு னியே
ன்சொற் கடந்து மனமும் தளர்ந்த
ளவீரன் வந்த இயல்பே! --- கம்பரா…

பச்சை - மோனையைக் குறிக்கிறது.
மஞ்சல் - காய்ச்சீர்களைக் குறிக்கிறது.

அகரம் அமுதா

18 கருத்துகள்:

  1. நல்ல விசயம் அமுதா, சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. //1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம்.//
    என்றால் முதல் சீர் புளிமாவாக அமைய அடியின் எல்லா சீர்களும் புளிமா அமைந்து இவ்வாறு அமையலாமா?


    கலைகள் வளரும் கவலைக் குறையும்
    கருணை நிலைக்கும் உலகில்
    விலையில் மணியும் பொருட்கள் பலவும்
    விளையும் பெருகும் வளனும்
    மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
    மரத்தை வளர்ப்போம் இயற்கை
    வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
    வறுமைப் பிடியில் உழல்வோம்.

    பதிலளிநீக்கு
  3. உமா சொன்னது…

    /////// //1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம்.//
    என்றால் முதல் சீர் புளிமாவாக அமைய அடியின் எல்லா சீர்களும் புளிமா அமைந்து இவ்வாறு அமையலாமா?////////




    கண்டிப்பாகக் கூடாது. அடியின் முதற்சீராக தேமாங்காய் அல்லது தேமா மட்டுமே அமைய வேண்டும். புளிமாங்காய் மற்றும் புளிமா அடியின் இரண்டாம் சீரிலிருந்து அடுத்துவரும் சீர்களில் அமையலாம். குறிப்பாக புளிமாங்காய் 3ஆம் 5ஆம் சீர்களில் மட்டுமே அமையும். அல்லது அமையலாம்.

    ஆகத் தங்களின் பா அழகாகவும் அருமையாகவும் அமையதுள்ளமையால் அதில் மாற்றம் செய்ய வேண்டாம். இனி எழுதும் பாக்களை

    தேமா + புளிமா + புளிமா + புளிமா
    புளிமா + புளிமா + புளிமா === என்ற வாய்பாட்டில் எழுதவும்.

    பதிலளிநீக்கு
  4. குழலி / Kuzhali சொன்னது…

    நல்ல விசயம் அமுதா, சிறப்பாக உள்ளது



    மிக்க நன்றிகள் குழலியாரே!

    பதிலளிநீக்கு
  5. தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா

    வில்லோடு நாணும் விரைந்தேகு அம்பும்
    இருந்தாக வேண்டும் விடுக்க
    சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
    திறனோடு வேண்டும் சுடுசொல்
    இல்லாத பேச்சு இணையான கூட்டு
    நலியாத நல்ல இலக்கும்
    பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
    புறம்போகச் செய்யும் துணிவும்

    பதிலளிநீக்கு
  6. இன்னும் ஓர் ஐயம்

    ஒரே பாவிலேயே இரு வகையான அடியும் அமையலாமல்லவா?
    தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா எனவும்
    தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா எனவும்

    பதிலளிநீக்கு
  7. dear boss....

    one of my friend gets a job offer in malaysia... he has some questions
    regarding the pay structure, tax for NRI's there... he wants to
    consult with any of our friends who are working now in Malaysia...

    i think since u have worked in Singapore some time back, u know some
    of our blog friends in malaysia...

    if u give ur phone number i will connect him with u... so he can get
    clear on his doubts...

    mail me to vasanthfriend.raju@gmail.com... its urgent.. so soon... :)

    thanks boss...:)

    பதிலளிநீக்கு
  8. உமா சொன்னது…

    ////இன்னும் ஓர் ஐயம்

    ஒரே பாவிலேயே இரு வகையான அடியும் அமையலாமல்லவா?
    தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா எனவும்
    தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா எனவும்/////


    அமையலாம். அதற்கு வரையரை கிடையாது. மேலுள்ள காட்டுப்பாவாகிய கம்பன் பாவை நோக்குக. இலக்கணப்படி அதே வேளையில் காய்ச்சீர்கள் மாறிமாறி வந்துள்ளதல்லவா!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வசந்த் நான் தமிழகத்தில் அல்லவா கடந்த ஓராண்டாக உள்ளேன். வேண்டுமெனில் எனது நண்பர்கள் மலேசியாவிலும் சிங்கையிலும் உள்ளனர். அவர்களை வேண்டுமாயின் அறிமுகம் செய்து வைக்கிறேன். தனிமடலில் தங்களைத் தொடர்புகொள்கின்றேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள ஆசிரியருக்கு...

    நன்றிகள். தங்கள் தனிமடலைக் கண்டு பெரு உவகையுற்றேன். மகிழ்ச்சி.

    தாங்கள் தயைகூர்ந்து மலேசியாவில் பணி புரியும் தங்கள் தோழர் திரு.விக்னேசுவரன் அவர்களைத் தொடர்பு கொண்டு, எனது நண்பர் திரு. குழந்தைவேல் அவர்கள் 'மலேசியாவில் பணி புரிவதில்' அவருக்குத் தோன்றியுள்ள ஐயப்பாடுகளை தெள்ளென நீக்க உதவி செய்யுமாறு தாங்கள் அன்போடு பரிந்துரைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

    தங்கள் பணிவுள்ள,
    இரா.வசந்த குமார்.

    பதிலளிநீக்கு
  11. மன்னும் மாந்தர் மகிழ்வுக் கென்றே
    .....மழைபோல் மறைவாக் கீந்தாய்
    முன்னம் உன்தாள் நினைவில் முழுதாய்
    .....மூழ்கும் அன்பர் அகத்தை
    கின்னம் முழுதும் களைந்துன் னுருவாய்
    .....கேளா தாக்கிக் கொண்டாய்
    இன்னும் இருளாய் இருந்தே னென்று
    .....எனைக்கா ணிலையோ இனனே?

    பதிலளிநீக்கு
  12. அவனடிமை சொன்னது…

    மன்னும் +++ மாந்தர் மகிழ்வுக் +++ கென்றே
    .....மழைபோல் மறைவாக் +++ கீந்தாய்
    முன்னம் +++ உன்தாள் நினைவில் முழுதாய் +++
    .....மூழ்கும் +++ அன்பர் அகத்தை
    கின்னம் முழுதும் களைந்துன் னுருவாய் +++
    .....கேளா +++ தாக்கிக் +++ கொண்டாய்
    இன்னும் இருளாய் இருந்தே +++ னென்று
    .....எனைக்கா ணிலையோ இனனே?


    அவனடியாரின் பா அவருமை. ஆயினும் இலக்கணம் தப்புகிறதே அய்யா!

    பதிலளிநீக்கு
  13. மன்னும் மனிதர் மகிழ்ந்துய் திடவே
    .....மழைபோல் மறைவாக் களித்து
    முன்னுன் திருத்தாள் நினைவில் முழுதாய்
    .....முழுகும் அடியார் அகத்தில்
    கின்னம் களைந்தே குறைதீர்த் தருளி
    .....கிலிநீக் கிடுமென் குருவே
    இன்னும் இருளாய் இருந்தே னெனவென்
    .....இடர்கா ணிலையோ இனனே?

    பதிலளிநீக்கு
  14. தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா ::

    பார்த்துக்கொல். கண்ணில் கருவேல்கூர்த் தீட்டிப்
    பறித்துக்கொள் பச்சை இதயம்.
    வார்த்துச்சில் செவ்வி தழில்தேன்பூண். சாய்த்து
    வளைத்தள்ளும் திண்மை இளமை.
    ஈர்த்துத்தின். மென்மை விரலாலென் தோளை
    இழுத்தால்பின் செல்லும் விழிகள்.
    வேர்க்கும்முன் செம்மை எழிலூறும் மேனி
    வெல்லாட்டம் நில்லா துவங்கு.

    பதிலளிநீக்கு
  15. அவனடியாரின் பா உருக்கமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. பக்திமணம் என்பது மிக மேன்மையுடையதாக வீசுகின்றது. வாழ்க அய்யா!

    பதிலளிநீக்கு
  16. வசந்த் அவர்களின் பா அருமை அருமை. வாழ்க வாழ்க

    பதிலளிநீக்கு
  17. கண்ணன் குசேலனுக்கு,

    கண்ணா! நலமா! கனிவாய் அழைத்து
    கருத்தில் நுழைத்து விளித்தோய்!
    மன்னா இதுவே மருகும் மனதில்
    மறையும் கதிரை நிறைத்த!
    உண்ணா நிலையாய் ஒருவாய் அவலை
    உணர்ந்தென் திருவாய் அளிப்பாய்!
    விண்ணார் முகிலாய் விழிநீர் அழகும்
    விருட்டென் றகலும் உணர்வாய்!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com