திங்கள், 14 மார்ச், 2011

நூல் அறிமுகம்!






அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிட முகவரி-

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

15 கருத்துகள்:

  1. அடவு அருமையாக இருக்கிறது

    அட்டையின் முகப்பில் தெரியும் குறள்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. அமுதன் அவர்களுக்கு வணக்கம்.

    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். அமுதன் குறள் அமுதாய் இனிக்கும் என்பதில் ஐயமில்லை. வெகு நாளாய் எதிர்பார்த்த புத்தகம் வெளி வந்ததில் மகிழ்ச்சி. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மின்னஞ்சலில் தொடர்புககொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றிகள் திகழ் மற்றும் உமா அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் புத்தகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.

    அமுதன் குறளில் அழகும் தெளிவும்
    இமைக்கும் விழியின் இயல்பு.

    சிறப்பாய் சிறுவர்தம் சிந்தை தெளிய
    குறட்பா அமுதன் கொடுத்தார்- குறையில்
    திறத்தான் சுவையுறு தேனாய் தமிழ்பா
    அறத்தான் அமைத்த அழகு

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அகரம் அமுதனாரே! மிக்க மகிழ்ச்சி!
    எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
    தங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள ஆசானுக்கு,
    நீங்கள் தேசியத்தலைவருக்காய் எழுதிய நுங்கள் பாடல்களை பார்த்தேன். அம்மண்டிலங்களை முழுமையாக பார்க்க முடியவில்லை. அவை நூன்வடிவமாகிவிட்டனவா? அறியத்தர வேண்டுகிறேன். அத்தோடு நீங்கள் வெளியிட்ட நூல்கள் அனைத்தயும் பெறுவதற்கு அணியமாஉய் இருக்கிறேன். எப்படியாவது என்னை வந்தடைய ஆவண செய்வீர்களா?
    என்றும் அன்புடன்
    மாணியன்
    ச.உதயன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பு அமுதன் அவர்களே: வணக்கம்
    இத்தளம் புறக்கணிக்கப்பட்டதா ?
    வேறு தளத்தில் பாப்பாடங்கள் நடக்கின்றனவா ?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. /////அன்பு அமுதன் அவர்களே: வணக்கம்
    இத்தளம் புறக்கணிக்கப்பட்டதா ?
    வேறு தளத்தில் பாப்பாடங்கள் நடக்கின்றனவா ?/////



    அப்படியெல்லாம் இல்லை அவனடியாரே! தற்பொழுது என்னிடம் இணையத்தொடர்பு வசதி இல்லை. ஆதலால் என்னால் பாடங்களை நடத்தமுடியவில்லை. நான் இணையத்தொடர்பு எடுக்க ஓராண்டாவது ஆகும். அதுவரை நமது இந்த வலையில் பாடங்கள் நடத்துதற்கு என்னால் இயலாநிலை உள்ளது. அவ்வளவே

    பதிலளிநீக்கு
  9. புதிய பாடம் வராவிட்டால் என்ன? இதுவரை படித்ததோ ஏராளம். தற்கால நிகழ்வுகளை, மனத்தாக்கங்களை படித்த பலவகைப் பாக்களிலேயே எழுத முயலலாமே, இல்லையா நண்பர்களே?

    **********
    அன்னாடம் காய்ச்சிக்கு என்னாளும் நோன்பவர்
    அண்ணா ஹசாரேயா வார்.

    நாட்டைத் திருத்துவோம் நாடகம் போட்டேழை
    பாட்டை மறந்திடு வோம்.

    களங்கமில் காந்தியார் காட்டிய பாதை
    விளம்பரத் தால்விலை போச்சே!

    பதிலளிநீக்கு
  10. //புதிய பாடம் வராவிட்டால் என்ன? இதுவரை படித்ததோ ஏராளம். தற்கால நிகழ்வுகளை, மனத்தாக்கங்களை படித்த பலவகைப் பாக்களிலேயே எழுத முயலலாமே, இல்லையா நண்பர்களே?//

    அவனடிமையார் அவர்களே! மீண்டும் தங்கள் குறட்பாக்களை படித்தறிவதில் மிக்க மகிழ்ச்சி
    //களங்கமில் காந்தியார் காட்டிய பாதை
    விளம்பரத் தால்விலை போச்சே!
    உண்மை உண்மை.

    வெகு நாட்களுக்குப் பின்என்முயற்சி

    சமச்சீர் கல்வி

    சங்கப் பலகையின் சத்தியம் சாய்ந்திட
    இங்கே சிலரின் இயக்க சரித்திரம்
    தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை
    அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை
    பங்கமாய் செய்துநற் பாதை மறைத்திடுங்
    கங்குலாய் இச்'சமச்சீர்'

    பற்றொடை வெண்பா
    சரியாக அமைந்துள்ளதா?

    பதிலளிநீக்கு
  11. கங்குலாய் இச்'சமச்சீர் கல்வி.
    என கொள்க

    பதிலளிநீக்கு
  12. அகரம் அமுதனாரே! மிக்க மகிழ்ச்சி!
    எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!!

    பதிலளிநீக்கு
  13. எனது வலையில் இன்று:

    தமிழ்நாடு உருவான வரலாறு

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com