திங்கள், 20 அக்டோபர், 2008

27. உருவக அணி!

உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத்தோன்றா வண்ணம் உவமையின் தன்மையை உவமேயத்தில் ஏற்றயுரைத்தல் உருவக அணியாம்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்!

காமக் கடல்- இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்!

காமக் கடும்புனல் - இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்ந்த கதவு!

காமக் கணிச்சி - காமமாகிய கோடரி

இன்பவெள்ளம், கண்கயல், கைமலர், விழிவாள், பல்முத்தம், போன்றவையும் அப்படியே. உவமையெது உவமேயமெது எனத்தோன்றாமையால் உருவகமாயின.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. எங்குற்றாய் இத்தனைநாள் என்னசெய்தாய் என்னி்னன்பா!

    பொங்குமகிழ் வுன்பதிவைப் பார்த்தவுடன்- இங்கேநீ

    ஈற்றடி தந்திலை ஏனோ குழப்பமென

    சாற்றுக செய்தியினைச் சற்று.

    பதிலளிநீக்கு
  2. நாட்கள் சிலவாக நான்ஆள் மடிக்கணினி
    ஆட்கொண்ட நோயால் ஆவதியுற -மீட்டதனை
    முன்போல் பொலிவாய் முகிழ்ந்துழைக்க செய்தற்கே
    ஒன்றிரண்டு மாதமாச்(சு) ஓர்!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com