செவ்வாய், 5 மே, 2009

வெப்பம் உயரும் உலகு!

இக்கிழமைக்கான ஈற்றடி: "வெப்பம் உயரும் உலகு!"

11 கருத்துகள்:

 1. பெயரில்லா5 மே, 2009 அன்று 9:43 PM

  சேமிக்கும் செயல்மறந்திட் டீரோ உமக்குமச்
  சாமிக்கும் தான்வெளிச் சம் :-))))

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா5 மே, 2009 அன்று 9:44 PM

  மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
  பிட்டுண்டு மண்சுமந்த பெம்மான் கட்டுண்டு
  பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே
  வட்டெடுத்து வற்றிய மணற்பரப் பெங்கிலும்
  தொட்டவிடம் நீரூரும் தொன்மையும் விட்டகல
  கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து
  பட்டறைப் புன்னீர் பாயவும்நஞ் சாமாலை
  கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்
  ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்
  இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு
  வெப்ப முயரு முலகு

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா5 மே, 2009 அன்று 10:17 PM

  தளைதட்டும் பாவிட்டுத் தாழ்ந்தேன் பிழைபொறுப்பீர்
  களைதட்டிய பாடல் கவர்ந்து.

  தாழ்ந்தேன்னு சொன்னது சும்மா ஊலூலாயி. மோனை வேணும்னு மெனக்கெட்டது. நாங்களும் தப்பு விடுவம்ல.

  மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
  பிட்டுண்டு மண்சுமந்த பெம்மானுங் கட்டுண்டு
  பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே
  வட்டெடுத்து வற்றிய மணற்பரப் பெங்கிலும்
  தொட்டவிடம் நீரூரும் தொன்மையும் விட்டகல
  கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து
  பட்டறைப் புன்னீரைப் பாய்ச்சவும்நஞ் சாமாலை
  கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்
  ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்
  இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு
  வெப்ப முயரு முலகு

  பதிலளிநீக்கு
 4. மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்
  கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்
  கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட
  வெப்பம் உயரும் உலகு !

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடல் வாழ்த்துகள் மகேஷ் அவர்களே.!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் பெயரில்லாதவரே! அருமை. அருமை. பொருட்செறிவு கருதி தளைதட்டுதலைப் பொறுத்துக்கொள்ளலாம். வாழ்க நீர். வளர்க உம் வெண்பா ஆற்றல்.

  பதிலளிநீக்கு
 7. வற்றிய மணற்பரப் பெங்கிலும் -என்னுமிடத்தில் மட்டும் தளைதட்டுகிறது. சற்றே மாற்றலாம் எனக்கருதுகிறேன்.

  மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
  பிட்டுண்டு மண்சுமந்த பெம்மானுங் கட்டுண்டு
  பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே
  வட்டெடுத்து வற்று மணற்பரப் பெங்கிலும்
  தொட்டவிடம் நீரூறும் தொன்மையும் விட்டகல
  கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து
  பட்டறைப் புன்னீரைப் பாய்ச்சவும்நஞ் சாமாலை
  கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்
  ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்
  இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு
  வெப்ப முயரு முலகு

  பதிலளிநீக்கு
 8. அருமை, அருமை! பெயரில்லாதவரே!

  பதிலளிநீக்கு
 9. வேகமாய் இடங்களை எட்டுகின்ற எண்ணத்தில்
  வாகனங்கள் ஓடுது மண்ணிலே - மோகனமும்
  இப்படிதான் போகுது நாட்டிலே விட்டுவிட்டால்
  வெப்பம் உயரும் உலகு

  விவேக்பாரதி

  பதிலளிநீக்கு
 10. விவேக் பாரதியின் வெண்பா அருமை. அருமை. அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. அக்கினி நட்சத் திரவெய்யில் வீட்டினது
  பக்கமெல்லாம் தீயாகச் சுட்டுவிட - பக்கமாக
  எப்பக்கம் போனாலும் தாங்காதே எங்குமே
  வெப்பம் உயரும் உலகு!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com