சனி, 31 மே, 2008

பாடம்5 அடி!

சீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி
3-அளவடி
4-நெடிலடி
5-கழிநெடிலடி –என 5வகைப்படும்.

இருசீர் குறளடி முச்சீர் சிந்தடி
நாற்சீர் அளவடி ஐஞ்சீர் நெடிலடி
அறுசீர் முதலன கழிநெடி லடியே! -என்பது தொல்காப்பியம்!

நாம் கற்கும் வெண்பாவிற்கு அளவடியும் சிந்தடியும் போதுமானது என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1-அளவடி -ஓர்அடியில் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி எனப்படும். இவ்வளவடி நேரடி எனவும் பெயர் பெறும்.

2-சிந்தடி -ஓர்அடியில் மூன்று சீர்களைப் பெற்று வருவது. இச்சிந்தடி (வெண்பாவில்) வெண்பாவின் ஈற்றடியாக மட்டுமே வரும்.

எ.காட்டு:-

பொன்னைப் பொருளைப் புகழை மதியாமல்
அன்னைத் தமிழை அகமேற்றார்! -முன்னம்
தமிழர் புரிந்த தவத்தால் கிடைத்த
அமிழ்தாம் கலைஞர் அறி!

வந்த மொழிக்கெல்லாம் வாய்வீட்டில் வாழ்வளித்தே
சொந்த மொழிமாளச் சம்மதித்தோம்! -இந்தநிலை
மாற வழிகண்டார் மன்னுபுகழ் மாக்கலைஞர்
சீராள் செம்மொழியாய்ச் செய்து! -அகரம்.அமுதா

இவ்விரு வெண்பாவின் முதல் மூன்று அடிகளும் அளவடியாக வந்தமை காண்க. ஈற்றடியாகிய நான்காம் அடி மூன்றே சீர்களைப் பெற்று சிந்தடியாக வந்தமையையும் காண்க.

குறிப்பு:-

முதல் மூன்றடிகளும் அளவடியாகவும் நான்காமடியாகிய ஈற்றடி சிந்தடியாகவும் வரும். இருவே அனைத்து வெண்பாவிற்கும் உள்ள பொது விதி!

அகரம்.அமுதா

16 கருத்துகள்:

  1. I am referring to your comments in http://kavinaya.blogspot.com and am simply amazed at the well structured venba.

    ஒரு அழகான வெண்பாவைக் கண்டு உளம் களிப்புற்றதை எப்படிச் சொல்வேன் !
    இதுபோன்ற மரபுக் கவிதைகள் நமது தமிழ் இலக்கியத்திற்கு வளம் ஈட்டும் என்பதில்
    ஐயமுண்டோ ?
    அக்கால வெண்பா நடையில் உள்ள இப்பாவிற்கு அக்கால தமிழ்ப்பண்ணில்
    மெட்டு போட்டு பாட முயற்சித்து உள்ளேன்.
    http://www.youtube.com/watch?v=Ar_3GTJHeDo


    அகரம் அமுதா அவர்களுக்கு எனது ஆசிகள்.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    For the first time, I am coming to see your other posts in your blogs. All the Best. God Bless you and your family.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. அய்யா சுப்பு ரத்தினம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  3. அகரம்.அமுதா,
    இதுவரை மூன்றுமுறையே முயன்றிருக்கிறேன்.
    தங்கள் ஊக்கத்தினால், இதோ இன்னொரு முயற்சி:

    வரும்மொழி யெல்லாம் வளம்தரும் வாழை
    தரும்பயன் போலத்தான் - பன்மொழிக் கலையாவும்
    எம்மொழியில் சேர்த்திடபின் மெல்லத்தான் சாகும்
    எனும்பேதை அச்சம் தவிர்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் ஜீவா அவர்களே! இது இன்னிசை வெண்பாவாகும். மிக அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள். மூன்றாம் முறையாக முயற்சிக்கிறேன் என்று தாங்கள் எழுதியிருப்பதை நான் நம்பவில்லை. கைதேர்ந்த வெண்பாச்சிற்பி எழுதும் வெண்பாபோல் இருக்கிறது. ஆகையால் தங்களுக்கு வெண்பா எழுதும் ஆற்றல் நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆகா, தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. அப்போ, சரியாத்தான் எழுதியிருக்கிறேன். உண்மையாவே, அது நாலாவது வெண்பாதான்.
    தொடர்ந்து அடுத்த பாடம் எப்போது? இன்னிசை வெண்பா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள ஆசை. வரும் பாடங்களில் வரும் போலும்!

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! ஆறாவது பாடத்தை இன்றே தந்து விடுகிறேன். மாலைவரை பொறுத்திருக்கவும். இன்னிசை வெண்பாவைப் பற்றி இப்பொது பாடம் கிடையாது.ஏனென்றால் வெண்பாவிற்கான இலக்கணத்தை முதலில் முடித்துவிடுகிறேன். பிறகு வெண்பா வகைகளைப்பற்றி பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  7. வருகின்ற மொழியனைத்தும் சருகே நம் வாழை‌
    தருகின்ற பயனக் கோர் நிகராமோ நீயே சொல்
    உதிக்கின்ற கதிரவனை யொரு கணம் உற்று நோக்கும் = பின்
    மதியும் மறையுமாம் தினம்.

    இது வெண்பா அல்ல. ஜீவாவுக்கோர் ரெஸ்பான்ஸ்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    பதிலளிநீக்கு
  8. அய்யா சுப்புரத்தினம் அவர்களுக்கு! தாங்கள் பாடியகவி வெண்பாத் தளைகளில் அடங்காது எனினும் பொருட்செறிவை என்னவென்று சொல்வேன். தங்கள் கூற்றை நான் வழிமொழிகிறேன். ஆயினும் நண்பர் ஜீவாஅவர்கள் பன்மொழிக் கலையாவும் நம்மொழியில் சேர்ந்திடல் வெண்டும் என்ற பாரதியின் கனவையே காண்கிறார். அதிலொன்றும் தவறில்லையே! ஆனால் இன்றைக்கு நம் இளைஞர்கள் கலைகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக வேற்றுச் சொற்களையே இறக்குமதி செய்து தமிழைச் சீரயிக்கிறார்கள். அவர்களைத் தங்கள் பாடல் மிக அருமையாக விமர்சிப்பது அருமை. தங்களது பாடலை வழிமொழிவதோடு எனது விருப்பத்தையும் வெண்பாவாக்கி விடுகிறேனே!

    இது என்கூற்று:-

    வேற்று மொழிகலந்தே வெல்தமிழை மாய்ப்பதுவும்
    மாற்றமெனும் பேரில் மரபழிக்க -வேற்று
    நடையைப்பின் பற்றும் நவீனமும் அன்றிப்
    பிடிக்காத தில்லை பிற! ---அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  9. அகரம் அமுதா அவர்கட்கு நன்றி.

    நானே சொல்லிவிட்டேனே .. இது
    வெண்பா அல்லவென ..இம்
    மண்பால் கொண்டுள்ள
    அன்பால் எழுதியதைத் தாங்கள் = தமிழ்ப்
    பண்பால் அளந்து பரிவுடனே சிறப்பித்த‌
    என்பால் கொண்ட இரக்கத்தை
    என் சொல்வேன் !

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பி.கு: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி நான். நல்லவேளை. பிரியாணி ஆகவில்லை !!

    பதிலளிநீக்கு
  10. பாலைப் பலவாய்ப் பயன்படுத்திப் பண்பாயப்
    பாலில் கலந்தீரே நீர்!

    அய்யா! இக்குறள் வெண்பாவின் ஈற்றடியைக் கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு பார்க்கவும். பாலில் நீரைக் கலந்தீர் என்றும் பால் என்ற சொல்லைப் பலமுறை பயன்படுத்தி அப் பால் என்ற சொல்லில் இரண்டறக் கலந்துவிட்டீர் என்றும் பொருள்படும்.

    பதிலளிநீக்கு
  11. பாலில் நீர் என்றாலும்
    பால் இல். நீர் என்றாலும்
    பருகிடுவார் தமிழ்ப்புலவர் தம்
    பாவில் சீர் சிதைந்தாலோ =
    சினம் கொள்வார் அனலும்
    விழுங்குமாம் பொன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com
    " இலக்கணம் பயில இங்கே செல்லவும்."

    பதிலளிநீக்கு
  12. எண்ணா திவன்செய் பிழையைப் பெரியோய்நீர்
    மன்னிக்க வேண்டும் மறந்து!

    பதிலளிநீக்கு
  13. Madam,
    I got only amazed NOT at all angry at your remarkable poetic response.
    What I remark (or perhaps have in my mind) is just as a fire melts gold only to make it more beautiful and ornamental, so also, a tamil scholar quickly responds to a student's deviation from grammar to make him adhere to rules of grammar. You made this old man your obedient student.
    I wish my words of eulogy (praise) may be seen in this perspective.
    Ok.
    Did you visit
    http://vazhvuneri.blogspot.com
    Is it possible to summarize the
    Thiru neri paa in simple venba ?
    subbu rethinam
    thanjai.
    PS: tamil font is not available on hand. anbu koornthu mannikkavum

    பதிலளிநீக்கு
  14. ennakku Naal, prappu, kashu, malar pattri konjam vilakka mudiyuma. rajaram000@gmail.com

    Nandri

    பதிலளிநீக்கு
  15. முக்கனி யாய்ச்வைக் கும்தமிழ் போற்றுவோம்
    முக்கலை யாய்வள ரும்தமிழ் போற்றுவோம்
    மூத்தமொழி தந்த முதல்வனை போற்றியே
    முத்தமிழ்கல் உய்யும் உலகு.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com