புதன், 8 ஜூலை, 2009

காண வருமாங் கனி!

இக்கிழமைக்கான ஈற்றடி:- காண வருமாங் கனி!

அகரம் அமுதா

11 கருத்துகள்:

  1. தென்றல் தவழும்செந் தாமரைத்த டாகமதில்
    வெண்நிலவு தாந்தோன்ற பூத்தவிரு அல்லிமலர்
    தன்னிலே சுற்றித் திரிகரு வண்டினையே
    காண வருமாங் கனி


    சரியாக வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. செந்தாமரைத் தடாகம் போல் குளிர்ந்த சிவந்த தலைவியின் முகத்தில் இட்டப் பொட்டானது அக்குளத்தில் தெரியும் நிலவினை போன்றதால் அல்லி மலர் போன்ற அவள் விழி விரிய ,மலரைச் சுற்றும் வண்டாக அவள் கருவிழிகள் அலைப் பாய அதனைக் காண மாங்கனியைப் போன்ற சிறந்த இனிமையான தலைவன் வருவான்.[ கனிகளில் சிறந்தது மாங்கனி, தலைவிக்கு தலைவனே மிகச் சிறந்தவன்.]

    பதிலளிநீக்கு
  2. பாடலையும் தாங்கள் கூறியுள்ள பொருளையும் பொருத்திப்பார்க்க கொஞ்சம் கால இடைவெளி தாருங்கள். நாளை உரைக்கிறேன் தோழி!

    பதிலளிநீக்கு
  3. அன்பு அகரம் அமுதா...

    இந்த வரி ரொம்பவே சிரமப்படுத்தி விட்டது. இன்பகவிக்கு ஏற்றாற்போல் வரி இருந்தாலும் வெண்பா எழுதுவதற்குள் மலைத்து விட்டு, ஒன்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

    மதுவிறைக்கும் தேகம்நீ! மாலைவான மஞ்சள்
    அதுயெரிக்கும் மேகம்நீ! ஆவேச - வதுவையில்நீ
    நாணங் களையும் முதலிராவைக் கண்கொண்டு
    காண வருமாங் கனி!

    முதலிரவில் யாரும் தீண்டாமல் டேபிள் மேல் ஊதுபத்தி சாம்பல்களோடு இருக்கும் பழங்களைச் சொல்கிறாராம்!

    பதிலளிநீக்கு
  4. ////இந்த வரி ரொம்பவே சிரமப்படுத்தி விட்டது இன்பகவிக்கு ////

    நன்பா நவிலும் நயங்கற்ற நண்பன்
    இன்ப கவிக்கிஃ தியலாதோ? -முன்பொருநாள்
    தீயிற் கொடியதோ தீயென்ற ஈற்றடிக்கு
    ஆயு(ம்)பொருள் தந்தவனால் ஆர்த்து?

    பதிலளிநீக்கு
  5. அன்பு அகரம் அமுதா...

    உங்கள் 'மன்னித்து விட்டேன். போ' கண் கொண்டு பார்த்ததால், என் வெண்பாவில் தளை தட்டுவதைச் சுட்டிக் காட்டாமல் விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மாற்றி விடுகிறேன்.

    மதுவிறைக்கும் தேகம்நீ! மாலைவான மஞ்சள்
    அதுயெரிக்கும் மேகம்நீ! ஆழ - வதுவையில்நீ
    நாணங் களையும் முதலிராவைக் கண்கொண்டு
    காண வருமாங் கனி!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வசந்த்! மேலும் இரண்டுப்பிழைகள்.

    மதுவிறைக்கும் தேகம்நீ! மாலைவான் மஞ்சள்
    அதுயெரிக்கும் மேகம்நீ! ஆழ - வதுவையில்நீ
    நாணங் களையும் முதலிரவைக் கண்கொண்டு
    காண வருமாங் கனி!

    ////மாலைவான -மாலைவான்
    முதலிராவை -முதலிரவை////

    பதிலளிநீக்கு
  7. உமா அவர்களின் கருத்துக்களும் பாடலும் ஏற்கப்பட்டன.

    பதிலளிநீக்கு
  8. வண்ணத்துப் பூச்சியொன்று ஆண்மை ததும்பவந்து
    கண்கவர் பூவொன்றைக் கூடித்தன் - எண்ணத்தை
    நாணமுறக் கூறிவிட்டு பூவுடைய புன்னகையைக்
    காண வருமாங் கனி

    விவேக்பாரதி

    பதிலளிநீக்கு
  9. அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளீர்கள் விவேக் பாரதி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எனக்குத்தான் அத்தைமகள்! எல்லையில்லா ஆசைமகள்!
    என்றும் எழிலார்ந்த காதலனை – இன்றுபோல்
    நாணமுடன் ஊடலாகி நல்முகம் காட்டிட
    காண வருமாங் கனி!

    பதிலளிநீக்கு
  11. இவ்வெண்பாவைப் படித்தால் காதல் தோன்றாதவர்க்குக் கூட காதல் வருமே.

    ---- எனக்குத்தான் அத்தைமகள்! எல்லையில்லா ஆசைமகள்! ----- வாழ்க

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com