ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அழைப்புப் பா!

காட்சிக் கெளியர்; கவினுறு மொழியர்;
மாட்சித் தமிழே மனதை
ஆட்சி புரியும் அறிஞர்; தமிழின
மீட்சிக் கெழுதும்
வீச்சுடை பாவலர்;
திண்ணியர்; உண்மையர்;
தண்ணிழல் சொரியும் தருவாம்
தமிழ நம்பியின்
தமிழை நம்பிநாம்
பாக்கள் புனையப் புகுந்தோம் எம்மை
ஆக்கல் அவர்தங் கடனே
பொருளுடை இடுகைகள் புனைந்தே
அருளுடை அவர்வந் தருவிருந் தளிக்கவே!


அகரம் அமுதா

4 கருத்துகள்:

 1. அன்பார்ந்த அ.அ.,

  என்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எழுதிக் கூச்சத்தில் நெளியச் செய்து விட்டீர்கள்.

  உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.

  அடுத்த பயிற்சியாக, ஆசிரிய மண்டிலங்கள் பற்றிய இடுகையை எழுதுகிறேன்.

  அன்பர்கள் தொடர்ந்து பங்கேற்று ஒத்துழைக்க வேண்டுகின்றேன்.

  நன்றியுடன்,

  தமிழநம்பி.

  பதிலளிநீக்கு
 2. அய்யா தமிழநம்பி அவர்களுக்கென் வணக்கங்கள். முன்போல் இனிவரும் காலங்களிலும் அனைவரது ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கும். வருக. பாடங்களைத் தருக.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் அமுதா அவர்களே. மிக்க மகிழ்ச்சி. மிக அழகான வடிவமைப்பில் அருமையான பாக்களுடன் வலைக்கு உயிரோட்டம் வந்துவிட்டதில் மிக்க.......... மகிழ்ச்சி. இனி கண்டிப்பாக பாக்கள் பெருகும்.
  அன்புடன் உமா

  பதிலளிநீக்கு
 4. நன்றிகள் உமா அவர்களே! வருக ஒத்துழைப்பு தருக.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com